மாநிறம், மெல்லிடை, மின்னல் பார்வை,
அதீத உணர்ச்சி, அனிச்சை அசைவுகள்
என் மீசைக்கு சிலிர்ப்பூட்டும் சிற்றிறகு நீ…
பெண்ணுக்கும் சிறு மீசை அழகு… உணர்த்தினாய் நீ…
நான் செல்லும் இடத்தில் எல்லாம் நீ…
நான் உன்னை தொடர்கிறேனா ? தெரியவில்லை…
துருதுருவென நீ செல்வதும்,
சட்டென்று நின்று என்னை பார்ப்பதுவும்,
என் ரத்தத்தில் மின்னலை கலக்கும் reactions
இது சற்று மிகை, ஏனென்று உனக்கு தெரியுமல்லவா ???
எனக்கு ரத்தம் இல்லாமல் இருக்கலாம்,
என் ஒவ்வொருயிர்த் துளியும் நீ தான்…
அணு குண்டு கூட பிரிக்க முடியாத நம் காதலை
இந்த மனிதர்கள் மிதித்தே புதைக்கிறார்கள்…
சரிவர காதலும் செய்வதில்லை, சரிவர காதல் செய்தால்,
வாழ விடுவதும் இல்லை…
– dedicated to கரப்பான் பூச்சிகள் காதல் முன்னேற்ற சங்கம் (தலைவர் : batty)
please visit Kaathal aarambam before reading this…
காதல் என்னும் ஆற்றில், திருமணம் என்ற படகில்,
மூழ்கினாலும் கவலை இல்லை , காதலில் தானே மூழ்குகிறோம்.
சினிமாவுக்குப் போகலாமென்று, கிளம்புகையில் மழை.
சோகமாய் அமர்ந்துவிட்டாய் நீ. வெயில் அடிக்கத்துவங்கியது.
வானவில் தோன்றியவுடன், பார்ப்பதற்காக உன்னை அழைத்தேன்,
எங்கே காணோம், என்று மீண்டும் சிணுங்கினாய் அழகாய்.
இதுவரை நீ வானவில்லை பார்த்திருக்கமாட்டாய் , சரியா என்றேன்,
ஆமாம் என்றாய் நீ கவலையாக…
சூரியன் இருக்கும் போது , நட்சத்திரம் தெரியாது,
அது போல தான் நீ இருக்கும் பொது, வானவில் தெரியாது.
வீட்டுக்குளே போ, நானாவது வானவில்லை பார்கிறேன் என்றேன்.
உண்மை தான், ஆனால் ஒரு வித்யாசம் உண்டு.
வானவில் வெறும் வண்ணங்களின் சேர்க்கை,
ஆனால் நீ, அழகுகளின் சேர்க்கை.
இப்பொழுது பார், வானம் வானவில்லை பிரதிபலிக்கவில்லை ,
உன்னை தான் பிரதிபலிக்கிறது.
என்ன என்றாய் கண்களால் ?
நீ நீல நிற சேலை அணிந்தவுடன் வானவில்லும் நீலமாகி,
வானமும் உன் சேலையைத் தான் பிரதிபலிக்கிறது
என்று உன்னை சுற்றிக்கொண்டேன்.
உன் சேலையின் வைர ஊசிகளைப் போல
செல்லமாய்க் கிள்ளி விட்டு அழகைப் பரப்பச் சென்றாய்…
எங்கள் பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டினார் அப்பா,
எனக்கு பிடிக்கவில்லை. அந்த பழைய வீடு எனக்கு பிடிக்கும்.
புது வீடு மிகவும் அன்னியமாக இருந்தது. இரண்டு மாடி வீடு.
வெறுப்புடன் தான் தொடங்கினேன் அங்கு வசிக்க.
மேல் மாடிக்கு ஒரு தேவதை குடி வரும் வரை,
என் அப்பா செய்த உருப்படியான வேலை இது தான்.
வந்த உடனே கண்கள் உரச, நான் சொக்கித் தான் போனேன்.
தேவதை எங்கள் வீட்டில் குடி புகுந்தாள்
என சுவரொட்டி அடிக்க மனம் துடித்தது.
காலம் செல்லச் செல்ல, சிறிது முன்னேற்றம்,
பேசத் தொடங்கினோம். எனக்கு பிடித்த வண்ணமே அவள் இருந்தாள் ,
இல்லையென்றால், அவளுக்கு பிடித்த வண்ணம் நான் மாரிவிட்டேனோ ?
காலம் இன்னும் வேகமாய் சுழன்றது, காதல் மனதில் சுழன்றது.
கடிதங்கள் எழுதினேன், கவிதைகள் எழுதினேன்,
அதைவிட முக்கியம் அவைகளை உன்னிடம் கொடுத்தேன்.
காதல் பிறந்தது, காதலியாய் நீயும் கிடைத்தாய்.
வீடு மாறினாய், வாசம் மாறினாய், வாக்கு மாறவில்லை நாம்.
நன்கு படித்தேன், வாழ்வில் உயர்ந்தேன், உன்னை கரம் பிடித்தேன்.
ஆரம்பமானது நம் காதல் வாழ்வு.
ஆரம்பித்தது, தொடரும் இனி பகுதிகளாக….
This is a sweet poem ( yaarum sollatiyum naane sollikarene
) is about my sweet friend, chellam a.k.a Prasi… She is the girl who attracted me the most in my class
செல்லம் எங்கள் அனைவரின் செல்லம்,
உன் உள்ளம் முழுதும் அழைகிய வண்ணம்.
உன் செயல் மற்றும் எண்ணம்,
யாவும் அழகு வெள்ளி கிண்ணம்.
யாரும் உன்னை அழைக்காத வகையில்,
நான் உன்னை அழைப்பேன் சபையில்,
நீ பொய்க் கோபம் கொண்டு உதட்டை பிதுக்குவாய்,
வெகுளி வழியும் என் சகோதரியாகிவிடுவாய் …
எப்பொழுதும் உன்னிடம் நான் பேசுவதர்க்கு முன்,
என் மனம் சோர்ந்திருக்கும் அதை அறிய மாட்டாய் நீ.
உன்னிடத்தில் பேசிய பின்னர் புத்துணர்ச்சி அடையும்,
அதையும் அறிய மாட்டாய் நீ.
என்னைத் தட்டி எழுப்பியிருக்கிறாய் என் செல்லம்,
அன்புத் தோழியாய் நீ இருக்குமிடம் என் உள்ளம்.
நான் நல் வாழ்வு வாழ வேண்டும் என்று,
எண்ணம் கொண்டவர்கள் சிலர் உண்டு.
எனது நலம் விரும்பியாய் ரூபம் கொண்டு,
என்றும் உண்டு ஒரு செல்ல பூச்சண்டு…
என் தோழியாய், என் சகோதரியாய், என் well wisherai,
என் வாழ்வில் பல பரிமாணத்தில் நீ…
குள்ளமே, என் செல்லமே, உன் அன்பு வலை,
என் வாழ்வுடன் பின்னியது, my sweet தவளை…..
ps : unnai marapena chellam
என் நண்பன் ஒரு பெண்ணைக் காதலித்தான்.
அவள் அவன் காதலுக்கு தலையசைத்தாள்…..
அவள் அவனைக் கடக்கும் போது அவள் முகத்தில்,
மழை பெய்து கொண்டிருக்கும் போது மண்ணில்,
நீர்க் குமிழிகள் தோன்றுவது போல வெடித்து எழும்,
அந்த வசீகரம், வார்த்தைகளுக்கு அப்பார்பட்டது……
அதே சமயம் என் மனதில் எழும் எரிமலைக் குழம்பும்,
அவளுடையது போலத் தான்….
ஏனென்றால், அவன் என் நண்பன் மட்டுமல்ல,
என் காதலியின் காதலன்…..
* Please use IE for better display of the post*
All of you, or atleast few of you know, that i would write some lines, thinking that they are poetic. So i did this work during my test hours for the past three years. But this last semester brought a difference. I have never captured by our college black cats and never stood before anyone regarding any matter. But now, a staff caught me in the exam hall with my tamil poem in my question paper. He complained about it in the office and i faced some problems due to that. They gave the question paper to me. I have all rights to write on it. Then please read the following lines and tell me what went wrong ?
என் பேனா முழுவதும் உன் காதலை நிரப்பி எழுதினேன்,
Paperல் முத்தமாய் நீ, மொத்தமாய் நீ.
என் நண்பர்கள் என்னை கேட்பதுண்டு,
ஏன் எப்பொழுதும் பெண்களைப் பற்றியே எழுதுகிறாய் என்று,
ஏனென்றால் பெண் தான் அழகு.
ஒவ்வொரு பெண்ணும் அழகு, தனித்தனி அழகு.
என்னைக் கவர்வது பெண் தான்.
நான் இது வரை சந்தித்த பெண்களில்,
நான் காதலிக்காத பெண்களே இல்லை.
I finished upto this line and that invigilator caught me. But the story continues like this.
என் தாய் முதல், அன்னை தெரசா முதல்,
இன்று நான் பழகும் என் தோழிகள் வரை.
என் காதல், வெறும் காதல் அல்ல, என் தவம்.
பெண் சமூகத்திர்க்காக நான் புரியும் தவம்.
பெண்கள் முன்னேர, ஆண்கள் தடையாக இருக்க முடியாது,
இருக்கவும் மாட்டார்கள்.
உங்களுக்குத் தேவை, சுதந்திரம் அல்ல,
சுத்ந்திரத்தில் தலையிடாமை. கவிதைகளையும் சேர்த்து.
பெண்மை பொலிவுர தேசம் மிளிரும்…..
* Please use IE for better display of the post*

I woke up and see ur face,
Im very lucky to get such grace.
I would never go to sleep without ur kiss,
Even im at other side of earth, i never miss.
You are my life and you are my everything,
I would sacrifice for you my anything.
I never prayed or pleaded god for any thing,
I want you forever, and this is the only thing
I cant imagine a life without you,
Because you gave me life too.
Mom, you are the only person in my life,
Made me to say “Its a Wonderful Life”.