Posts tagged: tamil

காதல் தொடர்ச்சி…

please visit Kaathal aarambam before reading this…

காதல் என்னும் ஆற்றில், திருமணம் என்ற படகில்,
மூழ்கினாலும் கவலை இல்லை , காதலில் தானே மூழ்குகிறோம்.

சினிமாவுக்குப் போகலாமென்று, கிளம்புகையில் மழை.
சோகமாய் அமர்ந்துவிட்டாய் நீ. வெயில் அடிக்கத்துவங்கியது.
வானவில் தோன்றியவுடன், பார்ப்பதற்காக உன்னை அழைத்தேன்,
எங்கே காணோம், என்று மீண்டும் சிணுங்கினாய் அழகாய்.

இதுவரை நீ வானவில்லை பார்த்திருக்கமாட்டாய் , சரியா என்றேன்,
ஆமாம் என்றாய் நீ கவலையாக…
சூரியன் இருக்கும் போது , நட்சத்திரம் தெரியாது,
அது போல தான் நீ இருக்கும் பொது, வானவில் தெரியாது.

வீட்டுக்குளே போ, நானாவது வானவில்லை பார்கிறேன் என்றேன்.
உண்மை தான், ஆனால் ஒரு வித்யாசம் உண்டு.
வானவில் வெறும் வண்ணங்களின் சேர்க்கை,
ஆனால் நீ, அழகுகளின் சேர்க்கை.

இப்பொழுது பார், வானம் வானவில்லை பிரதிபலிக்கவில்லை ,
உன்னை தான் பிரதிபலிக்கிறது.
என்ன என்றாய் கண்களால் ?
நீ நீல நிற சேலை அணிந்தவுடன் வானவில்லும் நீலமாகி,

வானமும் உன் சேலையைத் தான் பிரதிபலிக்கிறது
என்று உன்னை சுற்றிக்கொண்டேன்.
உன் சேலையின் வைர ஊசிகளைப் போல
செல்லமாய்க் கிள்ளி விட்டு அழகைப் பரப்பச் சென்றாய்…

காதல் ஆரம்பம்

எங்கள் பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டினார் அப்பா,
எனக்கு பிடிக்கவில்லை. அந்த பழைய வீடு எனக்கு பிடிக்கும்.
புது வீடு மிகவும் அன்னியமாக இருந்தது. இரண்டு மாடி வீடு.
வெறுப்புடன் தான் தொடங்கினேன் அங்கு வசிக்க.
மேல் மாடிக்கு ஒரு தேவதை குடி வரும் வரை,
என் அப்பா செய்த உருப்படியான வேலை இது தான்.

வந்த உடனே கண்கள் உரச, நான் சொக்கித் தான் போனேன்.
தேவதை எங்கள் வீட்டில் குடி புகுந்தாள்
என சுவரொட்டி அடிக்க மனம் துடித்தது.
காலம் செல்லச் செல்ல, சிறிது முன்னேற்றம்,
பேசத் தொடங்கினோம். எனக்கு பிடித்த வண்ணமே அவள் இருந்தாள் ,
இல்லையென்றால், அவளுக்கு பிடித்த வண்ணம் நான் மாரிவிட்டேனோ ?

காலம் இன்னும் வேகமாய் சுழன்றது, காதல் மனதில் சுழன்றது.
கடிதங்கள் எழுதினேன், கவிதைகள் எழுதினேன்,
அதைவிட முக்கியம் அவைகளை உன்னிடம் கொடுத்தேன்.
காதல் பிறந்தது, காதலியாய் நீயும் கிடைத்தாய்.
வீடு மாறினாய், வாசம் மாறினாய், வாக்கு மாறவில்லை நாம்.
நன்கு படித்தேன், வாழ்வில் உயர்ந்தேன், உன்னை கரம் பிடித்தேன்.

ஆரம்பமானது நம் காதல் வாழ்வு.

ஆரம்பித்தது, தொடரும் இனி பகுதிகளாக….

செல்லமே!!!!!!!

This is a sweet poem ( yaarum sollatiyum naane sollikarene :) ) is about my sweet friend, chellam a.k.a Prasi… She is the girl who attracted me the most in my class :)

செல்லம் எங்கள் அனைவரின் செல்லம்,
உன் உள்ளம் முழுதும் அழைகிய வண்ணம்.
உன் செயல் மற்றும் எண்ணம்,
யாவும் அழகு வெள்ளி கிண்ணம்.

யாரும் உன்னை அழைக்காத வகையில்,
நான் உன்னை அழைப்பேன் சபையில்,
நீ பொய்க் கோபம் கொண்டு உதட்டை பிதுக்குவாய்,
வெகுளி வழியும் என் சகோதரியாகிவிடுவாய் …

எப்பொழுதும் உன்னிடம் நான் பேசுவதர்க்கு முன்,
என் மனம் சோர்ந்திருக்கும் அதை அறிய மாட்டாய் நீ.
உன்னிடத்தில் பேசிய பின்னர் புத்துணர்ச்சி அடையும்,
அதையும் அறிய மாட்டாய் நீ.

என்னைத் தட்டி எழுப்பியிருக்கிறாய் என் செல்லம்,
அன்புத் தோழியாய் நீ இருக்குமிடம் என் உள்ளம்.

நான் நல் வாழ்வு வாழ வேண்டும் என்று,
எண்ணம் கொண்டவர்கள் சிலர் உண்டு.
எனது நலம் விரும்பியாய் ரூபம் கொண்டு,
என்றும் உண்டு ஒரு செல்ல பூச்சண்டு…

என் தோழியாய், என் சகோதரியாய், என் well wisherai,
என் வாழ்வில் பல பரிமாணத்தில் நீ…
குள்ளமே, என் செல்லமே, உன் அன்பு வலை,
என் வாழ்வுடன் பின்னியது, my sweet தவளை…..

ps : unnai marapena chellam :)

காதலியின் காதலன்

என் நண்பன் ஒரு பெண்ணைக் காதலித்தான்.
அவள் அவன் காதலுக்கு தலையசைத்தாள்…..

அவள் அவனைக் கடக்கும் போது அவள் முகத்தில்,
மழை பெய்து கொண்டிருக்கும் போது மண்ணில்,
நீர்க் குமிழிகள் தோன்றுவது போல வெடித்து எழும்,
அந்த வசீகரம், வார்த்தைகளுக்கு அப்பார்பட்டது……

அதே சமயம் என் மனதில் எழும் எரிமலைக் குழம்பும்,
அவளுடையது போலத் தான்….

ஏனென்றால், அவன் என் நண்பன் மட்டுமல்ல,

என் காதலியின் காதலன்…..

வாழ்க்கையின் யதார்த்தம்

இந்த உலகத்தில் எல்லாம் செயற்கை தான்…..

காலையில் எழுந்து பேப்பர் வாங்கப் போனேன்,
தாய் மடியில் அலையாய்த் தவழ்ந்து,
கார்மேகத்தில் துகளாய்ப் பறந்து,
தன் உரு பெற்று மகிழ்வாய் ஓடி,
என் தாய் கொண்டு சென்ற குடத்தில் நிரம்பி,
உயிர் ஊற்றாய் என்னுள் புகுந்து,
ஒவ்வொரு முறையும் என்னுள் அற்புதம் நிகழ்த்திய நதி,
அடை பட்டுக் கிடக்கிறது பொட்டிக் கடைகளிள் பாட்டில்களில்…….

குளித்து முடித்து பூஜை அறைக்குள் சென்றேன்….

அறை முழுவதும் இரத்த வாடை,
என் கண்ணில் பட்டன இரத்த வெளத்தில் பூக்கள்…..
ஒரு நாள் வாழ்க்கை மலருக்கு,
மலரும் முன்பே பறித்து,
அர்ச்சனை செய்கிறான் இறைவனுக்கு,
நூறு ஆண்டு வாழ்க்கை வேண்டி தனக்கு….

அலுவலகம் சென்றேன் மிகுந்த கவலையுடன்,

ஜன்னலின் ஊடே பார்த்தேன், ஒரு குப்பைத் தொட்டி….
அலுவலத்தில் இருக்கும் எனக்கு, அது குப்பைத் தொட்டி,
குப்பை பொறுக்கி வாழும் அவனுக்கு, அது அலுவலகம்….

அலுவல் முடிந்து வீடு திரும்பினேன்….
மறந்து போய் விட்டது மல்லிகை….
என்னை விட பெரிய மறதி கொண்ட ஜீவனைக் கண்டேன்…
ஆண்டாண்டு காலமக மனிதனுக்காக வண்டி இழுக்கிறது,
தனது கொம்புகளை மறந்த மாடு…

சோர்வுடன் வீடு வந்தேன்….
என்னை அன்போடு வரவேற்க மகிழ்வோடு,
நின்றிருந்தார் என் காதல் கணவர்…..

Thanglish: Vaazhkayin ethartham

Intha ulagil ellam seiyarkai than…….

Kaalaiyil ezhunthu paper vaanga ponen,
Thaai madiyil alayaai thavazhnthu,
Kaarmegathil thugalaai paranthu,
Thannudaya uru petru magilvaai oodi,
en thaayin kudathil nirambi,
uyir ootraai ennul pugunthu,
ovvoru muraiyum arputham nigalthiya nathi,
adai pattu kidakkirathu potti kadaigalil bottlegalil….

Kulithu mudithu poojai araikkul sendren….

Arai muzhuvathum rattha vaadai,
En kannil pattana, rattha vellathil pookkal….
Oru naal vazhkkai malarukku,
Malarum munbe parithu,
Archanai seigiran iraivanukku,
Nooru aandu vaazhkai vendi thanakku…

Aluvalagam sendren miguntha kavalayudan,

Jannalin vazhiye paarthen, oru kuppai thotti…
Aluvalagathil irukkum enakku, athu kuppai thotti,
Kuppai porukki vaazhbavanukku athu aluvalagam…

Aluval mudinthu veedu thirumbinen…
maranthu poi vittathu malligai..
Ennai vida periya marathi konda jeevanai kanden…
Aandu aandu kaalamaga manithanukku vandi izhukkirathu,
Thanathu kombugalai marantha maadu…

Sore vudan veedu vanthen….
Ennai anbodu varaverkka magizhvodu,
nindrirunthaar en kaathal kanavar…

English: The Reality of Life…..

Early morning i went for a walk,
I saw some thing that gave me a shock…
It enjoyed as the tide and ebb,
It mesmerized me in my water tub,
It exhibited its force as flood,
And even it runs inside my blood,
Such a great river with lots of settle,
Is packed in a small bottle…..

I entered the pooja room ,
I felt the blood smell in my lung room,
I saw the dead flowers shedding blood,
It ran thru my mind like a flood…
Life span of flower is one day,
Man prays god for living many day,
So killing the flower in its birth day…..

I entered the office with lots in my mind….

Through the window, i saw a garbage bin,
For office men like me, its garbage place,
But for paper pickers in garbage, its their office….

I left the office and returned to home….

I forgot the romantic Jasmine…
Favorite of mine….
Just then i crossed a Bullock…
Working for men for thousands of years,
Without remembering the horns are theirs….

I entered my house,
With huge smile in face,
My love was waiting in terrace,
With romance and love,
I hugged my hubby as his lady love……

தமிழ் பழகுகிறேன்

எனக்கு கவிதை எழுத வராது,
உன் விழிக்கரு, என் உயிர்க்கருவைக் கலைத்து,
என் கவிதைக் கரு ஆகும் வரை……

எனக்கு கவிதை எழுத வராது,
உன் மெளனம் என்னை Mute செய்து,
என்னை சாந்தப் படுத்திய வரை…..

எனக்கு கவிதை எழுத வராது,
உன் பேச்சு என்னை வாய் பிள்க்க வைத்து,
என்னையும் பேச்சாளன் ஆக்கிய வரை….

எனக்கு கவிதை எழுத வராது,
உன் ஸ்பரிசம் என்னை சிலிர்க்க வைத்து,
என்னை புதிதாய் பிறக்க வைத்த வரை…

எனக்கு கவிதை எழுத வராது,
நம் உயிர் கலந்து , நி நானாகி ,
நான் நீயாகிய வரை….

I’m Practicing Tamil

I dont know to write poem,
Till i encountered your eye’s beam
And it became my poem’s theme…..

I dont know to write poem,
Till your silence, muted me,
And made my life peaceful….

I dont know to write poem,
Till you spoke to me softer,
And made me an orator…..

I dont know to write poem,
Till your touch delighted me,
And made me reborn…..

I dont know to write poem,
Till our souls mixed up,
And we turned into one…..

ps:This is literal translation and dont shout at me for this translation :)